பிரபுதேவாவை இன்னும் காதலிக்கிறாரா அந்த நடிகை! வைரலாகும் புகைப்படம்..

prabhudeva manju warrier Ayisha
By Edward Feb 05, 2022 01:20 PM GMT
Report

சினிமாவில் நடிக்கும் சில நடிகைகள் வயதானாலும் இன்னும் இளமையுடன் இருப்பார்கள். அந்தவரிசையில் 43 வயதாகியும் இன்னும் இளம் நடிகை தோற்றைத்தினை கொண்டு சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் இண்டோ - அராபிக் படமாக உருவாகி வரும் ஆயிஷா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா பணியாற்றி வருகிறார்.

இது குறித்து சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில், மம்முட்டி, லாலேட்டன், சோபனா சேச்சி உள்ளிட்டவர்களின் தீவிர ரசிகை தான் நான். ஆனால் என்னுடைய பால்யத்தில் இருந்தே ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தது பிரபுதேவாவுக்கு மட்டும் தான்.

என் தனிப்பட்ட விஷயத்தில் அனைவருக்கு அறிந்தது தெரியும். அது பிரபுதேவா மீது இருந்த காதல் எவ்வளவு என்று. அது இப்போதும் இருக்கிறது. அது நட்பின் மீதான் காதல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடன பயிற்சியில் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கனவு இன்று நினைவாகியுள்ளது என்று காதல் ஸ்டிக்கரை கொண்டு பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.