ஜெயிலில் கம்பி எண்ணும் ரவீந்தர்!! நம்ப வைத்து ஏமாற்றியதுக்கு பழித்தீர்க்கும் மனைவி மகாலட்சுமி..
சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.
சமீபத்தில் தான் அவர்கள் திருமணமாகிய ஒரு ஆண்டை கொண்டாடினர். அது முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
ஆசை ஆசையாய் காதலித்த மகாலட்சுமிக்கு கூட இந்த விசயம் பற்றி ரவீந்தர் கூறவில்லையாம். மேலும் பல பிரபலங்களையும் ஏமாற்றி 3 வழக்குகள் இருந்து அது தெரியாமல் மகாலட்சுமியை நம்ப வைத்து திருமணம் செய்திருக்கிறார்.
இதனால் மகாலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தன்னுடைய மொபைல் நம்பரையும் மகாலட்சுமி மாறி இருக்கிறாராம். கணவரை மீட்க ஜாமீன் கேட்டும் தள்ளுபடி செய்யப்பட்டதால் என்ன செய்வது என்று இருந்துள்ளார்.
தற்போது அதற்கெல்லாம் நான் ஏன் யோசிக்கனும் என்று போட்டோஷூட் பக்கம் சென்றும் விளம்பரம் செய்தும் வருகிறார். ஆனால் புகைப்படங்களை பார்க்கும் சிலர் கணவர் கம்பி எண்ணுவதை கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையோ என்று கலாய்த்தும் வருகிறார்கள்.
You May Like This Video