இஸ்லாமியருடன் காதல்..மதம் மாற மறுத்த தேசிய விருது வாங்கிய நடிகை..
காதல் ஒருபோதும் சாதி, மதத்தையோ பார்த்து ஒருவர் மீது வருவதில்லை, இந்த காட்டமைப்புகளுக்கு எதிரானது. அப்படி தனது நீண்ட நாள் காதலரான இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை, தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார். யார் அந்த நடிகை தெரியுமா?. கடந்த 2003ல் தெலுங்கில் வெளியான எவரே அட்டகாடு என்ற படத்துல் அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியாமணி.
பிரியாமணி
தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி அது ஒரு கனாக் காலம், மது போன்ற படத்திலும் நடித்தார். 2007ல் கார்த்தி அறிமுகமாகிய பருத்தி வீரன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றதோது படத்திற்காக தேசிய விருது மற்றும் தமிழக அரசின் விருது உள்பட பல விருதுகளை வாங்கினார் பிரியாமணி. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியாமணி 41 வயதாகியும் குறையாத அழகில் ஜொலித்து வருகிறார்.
கடந்த 2007ல் நீண்டநாள் காதலர் முஸ்தஃபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் நடந்தஐபிஎல் போட்டியில் சந்திக்கொண்டவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக சமூகவலைத்தளத்தில் பிரியாமணிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
மாறவேண்டும் என்ற அவசியமில்லை
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், என் திருமணம் குறித்து பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள், ட்ரோல்கள், விமர்சனங்கள் வந்தன. இதுமிகவும் வருத்தமான ஒன்று, வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஏன் குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பல முன்னணி நடிகர்கள் மாற்று சாதி, மதத்தவர்களை திருமணம் செய்துள்ளனர். உடனே அவர்களின் மதத்துக்கு நாம் மாறவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தப்படுத்தாமல் காதலிக்கிறார்கள்.
ஆனால் ஏன் இதற்கு இத்தனை வெறுப்பு என்று புரியவில்லை, நான் முஸ்லீம் மாறிவீட்டேனா என கேட்கிறார்கள், நான் மாறிவிட்டேன் என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்? திருமணத்துக்கு முன் நான் இந்துவாக என் நம்பிக்கையை பின் தொடர்வேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் பிரியாமணி.