நல்ல டியூன் போட்டு கொடுத்தா இப்படி பண்ற..கோபத்தில் கொந்தளித்த இசைஞானி..
இசைஞானி
80-களில் ஆரம்பித்து தற்போது வரை தன்னுடைய இசையால் பல கோடி ரசிகர்களின் மனதை ஈர்த்து வருபவர் தான் இளையராஜா. அவர் பற்றி பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும். அந்தவகையில், இயக்குநர் பி எஸ் நிவாஸ் 90களில் ஃபேவரெட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் பாடல் உருவான விதம் பற்றி பகிர்ந்துள்ளார்.
1994ல் பி எஸ் நிவாஸ் இயக்கத்தில் செவ்வந்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் செம்மீனே செம்மீனே பாடல் உருவானதை பற்றி தான் பி எஸ் நிவாஸ் பகிர்ந்துள்ளார்.
நல்ல டியூன் போட்டு கொடுத்தா
அதில், அப்பாடலின் டியூன் -ஐ இளையராஜா கொடுத்தபோது முதலில் டூயட் பாடலாக எழுதபப்ட்டது. பாடலை கவிஞர் வாலி எழுதி முடித்தார். அதன்பின் ஒரு வருடம், கதையில் மாற்றம் செய்தேன்.
இந்த பாடல் டூயட் வேண்டாம், ஆண் மட்டும் பாடுவது போல் இருக்கட்டும் என்று முடிவு செய்து, கவிஞர் வாலியிடம் சொல்லி பாடல் வரிகளை மாற்றினேன்.
பாடல் பதிவுக்கு வரும்போது அதை பார்த்த இளையராஜா, என்னய்யா இது, டூயட் பாடல் தானே, ஏன் ஆண் மட்டும் பாடுவது போ இருக்கு என்று கேட்க, கதையில் மாற்றம் செய்துவிட்டேன் என்று கூறினேன்.
இதைகேட்டு கோபமான இளையராஜா, யோவ் நல்ல டியூட் போட்டு கொடுத்தா, இப்படி பண்றியே, ஏன்யா என்று கேட்டு, இந்த பாட்டு டூயட்டா இருந்தா தான் நல்லாயிருக்கும், என்று சொல்லி அவர் பாடல் வரியை திருத்தி, ஆண் பெண் படுவது போல் மாற்றி அமைத்தார் என்று பி எஸ் நிவாஸ் தெரிவித்துள்ளார்.