எதுக்கு தினமும் பயந்து வாழணும்..என் ரத்தம்!! விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஸ்பீச்...
2024 பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பல இடங்களுக்கு சென்று அரசியல் பரப்புரை ஆற்றி வந்தார். அதிலும் கரூரில் நடந்த பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சுமார் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது சிபிஐ விசாரனைக்கு மாற்றப்பட்ட நிலையில், விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேசிய ஒரு கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. DeSIFMA (De Sales International Film & Media Academy) என்ற படமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார் எஸ் ஏ சி.
எதுக்கு தினமும் பயந்து வாழணும்
அதில், சினிமாவை வெறும் பொழுதுப்போக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த ஒரு நல்ல விசயங்களை கண்டிப்பாக உங்கள் படத்தில் சொல்லுங்கள். சினிமாவை போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் வேறு கிடையாது.
அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய எஸ் ஏ சந்திரசேகர், நான் எந்தக் கட்சியிலும் கிடையாது, இப்போது நான் த வெக . இரண்டு வருடத்திற்கு முன் வரைக்கும் நான் எந்தக்கட்சியிலும் இல்லை, ஆனால் அண்ணா, பெரியார், கலைஞரை பிடிக்கும்.
1987ல் கலைஞர் கைது செய்யப்பட்டபோது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. 3வது நாள் கலைஞரின் நீதிக்கு தண்டனை என்று நானே விளம்பரம் கொடுத்தேன். அப்போது எம் ஜி ஆர் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்தார். ஆனால் ஒரு தவறு நடக்கிறது என்றால், அதை எதிர்க்க என்னிடம் இருந்த ஆயுதத்தை நான் பயன்படுத்தினேன்.
ஒருமுறைத்தான் பிறக்கிறோம், ஒருமுறை சாகப்போகிறோம். இதற்கிடையில் எதற்கு தினமும் பயந்து வாழ வேண்டும்? என் ரத்தம், என் ஜீன்தான் இப்போது என்று தனது மகண் விஜய்யின் துணிச்சலான அரசியல் செயல்பாடுகள் கூறித்து பேசியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.