அவர் தான் ஜெயிப்பார்..உஷாரா இருங்க விஜய் அண்ணா!! தளபதியின் தங்கை ஓபன் டாக்..
நடிகர் விஜய்
2024 பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பல இடங்களுக்கு சென்று அரசியல் பரப்புரை ஆற்றி வந்தார். அதிலும் கரூரில் நடந்த பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சுமார் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது சிபிஐ விசாரனைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்ததோடு, விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரபல நடிகை சொன்ன கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பாச்சி படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை மல்லிகா தான் விஜய் பற்றிய ஒருசில கருத்துக்களை கூறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உஷாரா இருங்க
அதில், இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணாலே விஜய் சார் பற்றிதான் வீடியோ வருது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணீ பேசிர்யிருக்காங்க, நானும் அவரை பத்தி வேசணும்னு நினைக்கிறேன்.
படப்பிடிப்பில் எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி ஆரம்பிச்சி மக்கள்கிட்ட பேசும்போது அவரிடம் நிறைய மாற்றம் தெரிஞ்சது, அதைப்பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, அவர் கேமரா முன்னாடி மட்டும்தான் நடிப்பார். மக்கள் முன்னாடி அல்ல.
நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயங்கள் நடக்கும், ஆனா கடைசியில அவர்தான் ஜெயிப்பார். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க, கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா என்று விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகை மல்லிகா.