மீனா வாய்ப்பை தட்டிப்பறித்த தேவயானி - 20 வருடங்களாக விஜய்யை ஒதுக்க இதுதான் காரணம்
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக மாறியவர் நடிகை மீனா.
இவர் 1982-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "நெஞ்சங்கள்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, அஜித் என பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சமீபத்தில் மீனாவின் கணவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஜய் பட வாய்ப்பு
தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை மீனா அளித்த பேட்டியில் " விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடிகை தேவயானிக்கு பதிலாக நான் நடிக்க வேண்டியது, அனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் நடிக்க முடியாமல் போனது " என கூறினார் .
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகா தான் நடித்திருந்தார். அனால் சில பிரச்சனைகளால் படத்தில் இருந்து விலகினார்.