நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம், stupid ஆ நீங்கெல்லாம், கொந்தளித்த பிரபலம்
நடிகை மீனா தமிழ் சினிமாவில் முத்து, அவ்வை சண்முகி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், முரளி, அர்ஜுன் என அனைவருடனும் நடித்து அசத்தியவர்.
இவர் உச்சத்தில் இருக்கும் போதே ஒரு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு.
இவரும் தெறி, பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார், இந்நிலையில் மீனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்தது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிலிருந்து மீனா தற்போது தான் மெல்ல மீண்டு வர, அவ்வபோது மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி வந்துக்கொண்டே இருக்கும்.
இதுக்குறித்து மீனாவின் தோழி, கலா மாஸ்டரிடம் கேட்க, ‘ஏங்க, அவரே இப்போது தான் அந்த விஷயத்தை கொஞ்சம் மறந்து பழைய நிலைக்கு வருகின்றார்.
தற்போது போய் stupid மாதி கேட்குறீங்க, நாங்களே எப்போதாவது இரண்டாவது திருமணம் குறித்து கேட்டாள், மீனா முறைப்பாள்’ என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.