40 வயதில் கோலாகலமாக நடந்த பிரபல நடிகையின் திருமணம்
Meera Chopra
By Yathrika
மீரா சோப்ரா
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிலா.
அந்த படத்திற்கு பிறகு மருதமலை, ஜாம்பவான், ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ள இவருக்கு 40 வயது ஆகிறது, ஆனால் திருமணம் செய்யாமல் இருந்தார்.
இந்த நிலையில் தனது காதலர் ரக் ஷித் என்பவரை டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராஜஸ்தான் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.