கிண்டல் செய்த சில்க் ஸ்மிதாவை கன்னத்தில் அறைந்த சூப்பர் ஸ்டார்!! இயக்குநர் ஓபன் டாக்..
சில்க் ஸ்மிதா
தென்னிந்திய சினிமாவை தன்னுடைய கவர்ச்சியான பார்வையாலும் கிளாமராலும் ரசிகர்கள் பட்டாளத்தையே ஈர்த்து வைத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. திராவிட பேரழகி என்றழைக்கப்படும் சில்க் இறந்து 28 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

அவர் பற்றிய சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்பட்டு வரும். அப்படி மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் 1984ல் அக்னி குண்டம் படத்தில் சில்க் ஸ்மிதா நடித்தார்.
அப்போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து சில்க் ஸ்மிதாவை சிரஞ்சீவி அறைந்துள்ள சம்பவம் தான் தற்போது லீக்காகியுள்ளது. அக்னி குண்டம் படத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு ஒரு பாடல் காட்சி இருந்தது.

கன்னத்தில் அறைந்த சிரஞ்சீவி
அப்போது உதவி இயக்குநராக ஜெயக்குமாரை சில்க் கிண்டல் செய்துள்ளார். அதை கவனித்த இயக்குநர் கிராந்தி குமார், ஜெயக்குமாரிடம் விசாரித்தார்ர். இயக்குநர் கிராந்தி குமார், சிரஞ்சீவியிடம் பேசி, அறைவது போன்ற காட்சியில் சில்க் ஸ்மிதாவை நிஜமாகவே அறையச்சொன்னார்.
அதேப்போல் சிரஞ்சீவியும் அறைய, அதனால் வலியால் சில்க் அழ, சிரஞ்சீவி அவரிடம் மன்னிப்பு கேட்டார். இதை ஜெயக்குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.