அந்த பாக்கியமே உனக்கு இல்ல..தோல்வியால் நடிகைக்கு அந்த பெயரை சூட்டிய தயாரிப்பாளர்கள்..
தனித்துவமாக இல்லாமல் யாரையோ பார்த்தவுடனே அந்த நடிகையின் முகம் இருந்தாலும், திறமை கொட்டிக்கிடக்கும் நிலையில், சில இயக்குநர்கள் அந்த நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடித்து தங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் நடிகையின் நடிப்பைத் தாண்டி படத்தில் வேறு எந்த நல்ல விஷயமும் இல்லாததால், படங்கள் தோல்வியை தழுவின.
ஆனால் இப்போது அதற்கு நடிகை தான் காரணம் என்று ராசியில்லா நடிகை என்ற பட்டத்தை தயாரிப்பாளர்கள் சூட்டியிருக்கும் தகவல் கசிந்துள்ளது.

ராசியில்லாத நடிகை
என்னதான் உயிரைக்கொடுத்து நடித்து வந்தாலும், சிகப்பு கமபள வரவேற்பு கிடைக்கும் என்ற கனவில் அந்த நடிகை இருந்தாலும், உனக்கு அந்த பாக்கியமே இல்லை என்று படவாய்ப்பை கைவிட்டதால் நடிகை ரொம்பவே கண்கலங்கிவிட்டாராம்.
இந்த படத்துக்கு பின் கண்டிப்பாக சினிமா உலகமே தன் வீட்டு வாசலில் லைன் கட்டி வந்து அட்வான்ஸை அள்ளிக்கொடுத்து சம்பளத்தை உச்சத்துக்கு ஏற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக ராசியில்லாத நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் அந்த யங் ஹீரோயின் பெயரை எழுதியிருக்கும் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.