13 வயசில் முதல் படம்! திருமணத்திற்கு பின் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை மோகினி!
தமிழ் சினிமாவில் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மோகினி. இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடனும், இந்தியில் அக்ஷய் குமாருடன் டான்சர் படத்தில் நடித்து பிரபலமாகினார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்த இந்திய மொழிப்படங்களில் நடித்து 90களில் கொடிக்கட்டி பறந்தார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக 50 படங்களுக்கு மேலும் மற்ற கபாத்திரங்கள் சேர்ந்து 100 படங்களில் நடித்திருந்தார். 1999ல் பரத் என்பவரை திருமணம் செய்த பின் சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக குற்றப்பத்திரிக்கை படத்தில் நடித்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் வாழவே பிடிக்காம திருமணத்திற்கு பிறகு தற்கொலை எண்ணங்களுடன் சிரமத்திற்கு ஆளாகினேன் என்று கூறியுள்ளார். மேலும் வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்கும் போது இடையில் ஸ்பீட் பிரேக் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.
அதனால் உளவியல் உடல் காரணமாக தற்கொலை எண்ணம் தோண்றியது என்று கூறியுள்ளார்.
தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கடவுள்கிட்ட வேண்டிகொண்டு பணிகள் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை மோகினி.