தலைகீழாக ஒர்கவுட் செய்யும் மிருனாள் தாகூர்.. இது புதுசா இருக்கே!! ரசிகர்கள் ஷாக்
மிருனாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் நடிகை மிருனாள் தாகூர். அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கிவிட்டது.
இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார் பேமிலி திரைப்படம் ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மிருனாள் கைவசமாக பல படங்கள் வைத்து இருக்கிறார். Dacoit என்ற படத்தில் புதிதாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஸ்ருதி ஹாசன் திடீரென விலகிவிட்ட நிலையில் அந்த படத்தில் மிருனாள் தாகூர் ஹீரோயினாக இணைந்து இருக்கிறார்.
ஷாக்கிங் வீடியோ
இந்நிலையில் தற்போது மிருனாள் தாகூர் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், அவர் தலைகீழாக ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். வீடியோ இதோ,