விடா முயற்சி பொங்கலுக்கு வராதா, பத்திரிகையாளர் தூக்கி போட்ட குண்டு
Ajith Kumar
Anirudh Ravichander
VidaaMuyarchi
By Tony
விடா முயற்சி
விடா முயற்சி அஜித் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தின் டீசரில் படம் பொங்கல் ரிலிஸ் என்று அப்டேட் விட்டனர்.
அதன் பின்பு படம் பொங்கல் வருமா என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், விடா முயற்சி பொங்கலுக்கு வருமா வராதா என்ற நிலை உருவாகியுள்ளதாக வலைபேச்சி பிஸ்மி கூறியுள்ளார்.
விடா முயற்சி படம் ஆங்கிலப்படமான ப்ரேக் டவுன் படத்தின் காப்பி, அதற்கான ரைட்ஸ் இன்னும் வாங்கவில்லை, அவர்கள் முதலில் இதை அறிந்து ரூ 100 கோடி கேட்டார்கள்.
ஆனால், தற்போது எல்லோரும் பேசி ரூ 30 கோடி என முடித்துள்ளதாகவும், அந்த தொகை கொடுத்தால் மட்டுமே படம் பொங்கலுக்கு வரும் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.