43 வயதாகியும் அது நடக்காது ஏன்!! காரணத்தை உடைத்த நடிகை மும்தாஜ்..
நக்மா கான் என்ற பெயரை சினிமாவிற்காக மும்தாஜ் என்று மாற்றினார் நடிகை மும்தாஜ். குஷி படத்தில் விஜய்யுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து வந்தார்.
சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான மும்தாஜ், சில காலம் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார் மும்தாஜ். சமீபத்தில் கூட வீட்டு வேலைக்காரப்பெண்ணை கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கினார்.
தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது தான் அதற்கு காரணமாம்.
பல பிரபோசல்கள் வந்தும் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் நினைப்பு என்னிடம் இல்லை என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் நடிகை மும்தாஜ்.