கல்யாணம் ஆகல ஆனா அந்த ஆசை எனக்கு இருக்கு.. 48 வயதான நக்மா வெளிப்படை

Jyothika Nagma Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 30, 2023 07:11 AM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நக்மா. இவர் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிஸி நடிகையாக வலம் வந்த இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

தற்போது 48 வயதான நக்மா திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், எனக்கு கல்யாணம் பண்ண கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை.

எனக்கும் திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது.ஆனால் அப்படி நடக்குமா என்பதை பொறுத்து இருந்தது தான் பார்க்க வேண்டும். நான் திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று நக்மா கூறியுள்ளார்.