பிள்ளைகளுக்கு ஆபத்து.. நளினியை ராமராஜன் விவாகரத்து செய்ய காரணமே இதுதான்!! வெளியான புது தகவல்..
தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் ராமராஜன். ராமநாராயணனிடம் 20 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்கவும் செய்தார் ராமராஜன். பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ராமராஜன் உதவி இயக்குனராக இருந்த போதே நடிகை நளினி அவரை காதலித்து வந்துள்ளார். அதன்பின் தான் இருவரும் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார் நளினி.
இந்நிலையில் நடிகை நளினி அளித்த சமீபத்திய பேட்டியில் ஏன் விவாகரத்து பெற்று பிரிந்தோம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், ஜாதகம் தான் எங்களுடையை விவாகரத்துக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். 7 ஜென்மம் எடுத்தாலும் அவர் தான் எனக்கு கணவராக வரவேண்டும்.
இப்போது நான் என்ன நினைக்கிறேனோ அது அவருக்கு தெரிந்துவிடும். நன்றாக இப்போது வரை பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல விஷயங்களில் கைக்கோர்த்து தான் இருக்கிறோம் என்று நளினி கூறியிருக்கிறார்.
மேலும் எங்களுக்குள் நேரம் சரியில்லை என்பதால் நாம் இருவரும் பிரிந்து இருந்தால் நல்லது என்றும் பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்ல இல்லை என்று ஜாதகத்தில் காரணங்கள் கூறப்பட்டதால் தான் நாங்கள் விவாகரத்து செய்தோம். அவருக்கு ஜாதகம் மீது அதிக நம்பிக்கை என்று நளினி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.