50 செகண்ட்-க்கு இத்தனை கோடியா!! கோடியில் சைட் பிஸ்னஸில் கல்லா கட்டும் நடிகை நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக பிரபலமாகி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 7 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில மாதங்களில் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர். அதன்பின் நடிகை நயன் தாரா ஜவான் உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
நயன்தாரா தமிழில் 5 கோடிக்கு மேல் சம்பளமாக பெற்று வந்த நிலையில் பாலிவுட் போனதும் 10 கோடி சம்பளம் பெறுகிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து பிரமோஷன் செய்ய இன்ஸ்டா அக்கவுண்ட்டை ஆரம்பித்து தன்னுடைய சொந்த மேக்கப் பிராடெக்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.
பொதுவாக நடிகை நயன் விளம்பர படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்குவது அறிந்த ஒன்று. ஆனால் தற்போது 50 நொடி விளம்பரத்திற்கு மட்டும் அவர் சுமார் 5 கோடி சம்பளமாக பெறுகிறாராம்.
விளம்பர நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் சம்பளமும் அதிகருக்குமாம். அப்படி சேர்த்த தொகையால் நயன் தாராவின் சொத்து மதிப்பு 200 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.