அட லேடி சூப்பர் ஸ்டார் நடிகை இதையும் விட்டு வைக்கலயா....

Nayanthara Tamil Cinema
By Yathrika Nov 24, 2023 04:30 PM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பெரிய போட்டி, பஞ்சாயத்து நடந்துவரும் நேரத்தில் அசால்ட்டாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் நயன்தாரா. 

அதற்கு ஏற்ப சோலோவாக படங்கள் நடித்து முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூல் வேட்டை படங்களை கொடுத்து வந்தார். இப்போது அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி கலக்கியுள்ளார். 

அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி..

அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி..

அப்படத்திற்கு பிறகு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் அவதாரம் எடுத்தது போல் தெரிகிறது. அவர் கேமராவை பார்ப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு புதிய தொடக்கங்களில் மேஜிக்கை நம்புங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனால் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பதாக கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அட லேடி சூப்பர் ஸ்டார் நடிகை இதையும் விட்டு வைக்கலயா.... | Actress Nayanthara New Avatar