கீர்த்தி சுரேஷ் செயல்!! நயன்தாராவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக தனது காதல் கதையை ரகசியமாக வைத்து இருந்த கீர்த்தி சுரேஷ் சில வாரங்களுக்கு முன்பு தான் அதை அறிவித்தார்.
அறிவித்த சில தினங்களில் திருமணமும் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனுக்காக கழுத்தில் தாலி உடன் மாடர்ன் லுக்கில் வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
நயன்தாரா
கீர்த்தி சுரேஷின் இந்த செயலால் தற்போது, நெட்டிசன்கள் நயன்தாராவை சாடி வருகின்றனர். நயன்தாரா அவர் நடிக்கும் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை.
ஆனால், அவர் தயாரிப்பில் வெளியாகும் படத்திற்கு மட்டும் ஓடி ஓடி ப்ரோமோட் செய்கிறார். இதனால், கடுப்பான நெட்டிசன்கள் நயன்தாராவை கீர்த்தியுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.