3 குழந்தைகள் வேண்டும்!! கணவர் ஒத்துழைக்கவில்லை.. புஷ்பா பட நடிகை ஓபன்
அனசுயா பரத்வாஜ்
தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து திரைத்துறையில் பிரபலமானவர் அனசுயா பரத்வாஜ்.
மம்மூட்டி நடித்த பீஷ்மா பர்வன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர். ரவி தேஜா, கோபிசந்த் மற்றும் கிருஷ்ண வம்சி ஆகியோரின் படங்களில் நடிக்கிறார்.
அனசுயா 14 ஆண்டுகளுக்கு முன் சுசாங்க் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், படுக்கை அறை விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் அனசுயா பேசியுள்ளார்.
ஓபன்
அதில், " எனக்கு மூன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், என் கணவர் வேலை வேலை என்று வெளியில் சென்றுவிடுகிறார், எனக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை.
ஒரு வீடு மகிழ்ச்சியாக இருக்க பெண் குழந்தை இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தனிப்பட்ட விஷயம் குறித்து பொது இடத்தில் அனசுயா பேசியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.