எனக்கு தலைக்கனம் இருக்கக்கூடாதா? எனக்குதான்டா வரணும்!! இளையராஜா பகீரங்க பதில்..
இளையராஜா
தமிழ் சினிமாவில் பல அயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து இசைஞானியாக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளா இசைஞானி.
சமீபகாலமாக தன் அனுமதி இல்லாமல் தான் இசைத்த இசையை படங்களில் பயன்படுத்துவதை எதிர்த்து லாயல்டி வழக்கு போட்டு வருகிறார் இளையராஜா.

ஏற்கனவே அவரின் செயல்களை வைத்து பலரும் தலைக்கனம் இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள். தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் இளையராஜா அளித்த பேட்டி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தலைக்கனம் இருக்கக்கூடாதா
அதில், அவருக்கு தலைக்கனம் அதிகம்னு சொல்றாங்க, எனக்கு வராமல் வேறு யாருக்குடா வரும்.. எனக்குத்தாண்டா வரணும், எனக்கு தான் திமிரு ஜாஸ்தியா இருக்கணும். உலகத்தில் யாரும் செய்யாததைத் தான் நான் செய்திருக்கிறேன்.
எனக்கு கர்வம் இருக்கு சொல்றாங்க. கர்வம் யாருகிட்ட, எப்ப வரும். நல்லா சேலையை பண்ணிட்டன்னா தான் கர்வம் வரும். நீ ஒன்னுமே பண்ணாம இருந்துட்டு, அவருக்கு மட்டும் கர்வம்னு சொன்னா எப்படி என்று இளையராஜா பேசியிருக்கிறார்.
// என்ன சொல்ல வர்றீங்க இளையராஜா ? //
— Sridhar Ravi (@SridharRavi90) November 12, 2025
கேட்டுக்கோங்க பாய்...
pic.twitter.com/rkwKuFTF1J https://t.co/YIpZPOuUve