பாவ்னி காதலுக்கு அந்த வேலை பார்க்கும் தொலைக்காட்சி? மோதிரம் மாட்டிய அமீர்..

Bigg Boss Pavani Reddy
By Edward Jul 19, 2022 01:10 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி நடிகையாக சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பாவ்னி ரெட்டி. ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கணவர் மரணத்தால் தனிமையில் வாழ்ந்து வந்தார் பாவ்னி. பின் அதிலிருந்து மீண்டும் சீரியல் பக்கம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அமீர் பாவ்னி காதல்

பின்னர் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ்-க்கு வந்த அமீருடன் காதல்வயப்பட்ட பாவ்னி இடையில் சர்ச்சையிலும் சிக்கினார்.

பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் ஆரம்பிக்கும் காதல் நிகழ்ச்சிக்கு பிறகு எண்ட்கார்ட் போடப்பட்டு பிரிந்து விடுவார்கள். ஆனால் பாவ்னி - அமீர் ஜோடி மட்டும் தற்போது வரை பிக்பாஸ் ஜோடிகள் 2 சீசன் வரை நீட்டித்து வருகிறார்கள்.

காதலை ஏற்ற பாவ்னி

அப்படி அமீரின் காதகை இன்று வரை ஏற்காத பாவ்னிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. எப்படியாவது எதையாவது செய்து இருவரை சேர்க்க நிகழ்ச்சி குழு தீவிரம் காட்டி வருகிறது என்ற விமர்சனமும் தொலைக்காட்சி மீது எழுந்துள்ளது.

அதற்கு காரணம் திருமணம், வலைக்காப்பு, காதல் பிரபோஸ், பிறந்தநாள் விழா என்று அனைத்தையும் செய்து வருவது தான் காரணம். அந்தவகையில் அமீர், பாவ்னியை மோதிரம் கொடுத்து பிரபோஸ் செய்துள்ளார்.

இதனையும் ஆரம்பத்தில் ஏற்காமல் ஆச்சரியத்தில் இருந்த பாவ்னி ஒரு கட்டத்தில் மோதிரத்தை ஏற்றுக்கொண்டுள்ளாராம். பாவ்னி அமீர் கொடுத்த மோதிரத்தை தன் கையில் போட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Gallery