உன் அம்மாவின் அதை பாரு.. உடலை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை பூர்ணா...

Gossip Today Actress Poorna Tamil Actress Actress
By Edward Feb 16, 2024 03:36 AM GMT
Report

நடிகர் பரத் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூர்ணா. இப்படத்தை தொடர்ந்து இவர் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

உன் அம்மாவின் அதை பாரு.. உடலை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை பூர்ணா... | Actress Poorna Bad Comment Reply For Dance

தற்போது இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 ம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் Devil என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது, நடிகை பூர்ணாவை மிஷ்கின் புகழ்ந்து தள்ளினார்.

இதனை அடுத்து படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்த வருகிறார் பூர்ணா.எனக்கு எப்படி என் அம்மா வாய்த்தாரோ அதேபோல் தான் என் கணவரும் எனக்கு வாய்த்திருக்கிறார். நான் சமீபத்தில் குழந்தை பெற்ற 15 நாட்களுக்கு பிறகு குண்டூர் காரம் படத்தில் நடித்து இருந்தேன்.

அப்போது நான் குண்டாக இருந்ததை பார்த்த பலர் என் உடலை கேலி செய்து, பன்னி மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்தார்கள் . உன் அம்மாவை பாருங்கள், அவரும் இதே மாதிரியான நடைமுறையை கடந்து வந்தவர் தான் என்று பதிலளித்ததாக கூறியிருக்கிறார்.