அக்கா அம்பிகா மீது மோசடி புகார்!! மெசேஜை பார்த்து ஷாக்கான ராதா..
நடிகை ராதா, தன்னுடைய அக்கா அம்பிகா, தம்பி மல்லிகார்ஜுனா மீது ரூ. 43.62 கோடி செக் மோசடி செய்ய முயன்றதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ராதா
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதா, எனக்கு ஆர் ஆர் கார்டன் போரூரில் இடம் இருக்கு. 2006ல் குடும்ப பிரிவினை முடிந்தப்பின் எனக்கு இந்த சொத்து கொடுக்கப்பட்டது. அதை நான் டெவலப் பண்ணிட்டு வருகிறேன். என் அக்காவுக்கும் தனியா பெரிய பிடிங் கொடுத்தாங்க, நான் பிசினஸ் விஷயமா மும்பை, கேரளான்னு மாறி மாறி போனதால், ஆபீஸ்ல கையெழுத்து போட்ட காலியான செக்குகளை வச்சிருப்பேன்.

என் குடும்பத்தை நம்பித்தான் எல்லாத்தையும் வச்சிட்டு போனேன், அவங்க இப்படி செய்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. கடந்த 16 ஆம் தேதி என் பேங்கல ஒரு அலர்ட் மெசேஜ் வந்தது. அதிலிருந்த தொகையை பார்த்து எனக்கு அதிர்ச்சியானது. அந்தளவுக்கு நான் சம்பாதிக்கிற ஆள் கூட கிடையாது. உடனே பேங்க்க்கு போன் பண்ணி அந்த செக்குகளை ஸ்டாப் பண்ணிட்டேன். ஆனால், அதே செக்குகளை மறுபடியும் 18 ஆம் தேதியும் கொண்டு போய் பேங்க்ல போட்டிருக்காங்க.
ஒரே தப்பை ரெண்டுமுறை பண்ணியிருக்காங்கன்னா அவங்களோட மோட்டிவேஷன் என்னன்னு தெரியணும் அதற்காகத்தான் நான் புகார் கொடுக்க அங்கே வந்து இருக்கிறேன். செக்கை யார் கொண்டு வந்து போட்டது என எனக்கு தெரியவேண்டும். அம்பிகா அக்கா பெயரில் தான் செக் இருக்கிறது.

என் தம்பி மல்லிகார்ஜுனா மேலயையும் எனக்கு சந்தேகம் இருக்கு, இதில் ரெண்டு பேரும் சேர்ந்து செயல்பட்டாங்களா, இல்ல வேற ஏதும் நோக்கம் இருக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. ஏற்கனவே என் தம்பி மேல பல புகார்கள் இருக்கு.
இந்த விஷயம் தெரிந்ததும் என் அக்கா அம்பிகாவுக்கு ஃபோன் பண்ணேன்,ஆனா அவங்க என் போனை எடுக்கவே இல்லை. அதனால்தான் வேற வழியில்லாம புகார் கொடுத்தேன் என்று ராதா தெரிவித்துள்ளார்.