நான் ஒரு குழந்தைக்கு அம்மா, என் உடம்பு அப்படித்தான் இருக்கும்.. நடிகை பூர்ணா ஓபன் டாக்
நடிகர் பரத் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை பூர்ணா.
இதனை அடுத்து இவர் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பூர்ணா நடிப்பில் டெவில் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பூர்ணா தன் மீது மோசமான கமெண்ட்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு எல்லாமே என் அம்மா. என்னுடைய அம்மா மாதிரி என் வேலைக்கு உறுதுணையா இருக்கிற ஒருத்தர் கிடைக்கவேண்டும் என்று நினைந்தேன்.
நான் நினைத்த மாதிரி எனக்கு அப்படியான கணவர் கிடைச்சார். எனக்கு டெலிவரியாகி 50வது நாளில் ஷூட்டிங் செல்ல ஆரம்பித்து விட்டேன். அந்த சமயத்தில் என்னுடைய கணவர் உறுதுணையாக இருந்தார்.
டெலிவரியான பிறகு கொஞ்சம் உடம் போடும், சமூக வலைத்தளங்களில் நான் பதிவிடும் புகைப்படங்களுக்கு கீழ் You look like a Pig என்று மோசமான கமெண்ட்கள்.நான் இப்போது குழந்தைக்கு அம்மா, என்னுடைய உடம்பு அந்த மாதிரி தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல் அப்படி கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார்.