ஆடையின்றி நடிக்கும் காட்சிகளை படமாக்கும் போது இப்படி நடக்கும்!..நடிகை பூர்ணா வெளிப்படை
நடிகர் பரத் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூர்ணா.
இப்படத்தை தொடர்ந்து இவர் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 ம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணாவிடம் தொகுப்பாளர், பிசாசு 2வில் நிர்வாண காட்சிகள் இருப்பதாக இயக்குனர் மிஸ்கின் கூறியிருந்தார். அதைப்பற்றி கூறுங்கள் என்றார்.
பதில் அளித்த அவர், இப்படத்தின் இயக்குனரே சொல்லிவிட்டார் படத்தில் நிர்வாணமான காட்சிகள் இருக்கிறது என்று அதில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.
அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை எல்லாம் சொல்லமுடியாது. ஆண்ட்ரியா அல்லது மிஸ்கின் சொன்னால் தான் சரியா இருக்கும்.
என்னால் நிர்வாண காட்சிகளில் நடிக்க முடியாது.அது பெரிய படமாக இருந்தாலும் என்னால் முடியாது. அது போன்று நடிக்க தைரியம் தேவை என்று பூர்ணா கூறியுள்ளார்.