பெண்களை அப்படி செய்பவர்களை பெட்ரோல் ஊற்றி..தொட பயம்வரும்!! கொந்தளிக்கும் நடிகை பிரகதி...
நடிகை பிரகதி
இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் 1994ல் வெளியான வீட்ல விஷேஷங்க என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் தான் நடிகை பிரகதி. நடித்த முதல் படமே ஹிட்டான நிலையில் அடுத்ததாக கேப்டன் விஜயகாந்துடன் பெரிய மருது படத்தில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வந்த பிரகதி, ஜெயம் படத்தில் குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்து, மாறி, சிலம்பாட்டம், எத்தன், கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் பிரகதி, 49 வயதாகியும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து இணையத்தில் அதை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பவர் லிஃப்டிங்கில் களமிறங்கி 4 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியொன்றில், இந்த சமுதாயத்தில் நடக்கும் அநீதிகள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், அட்டூழியங்கள், வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. அப்போ குற்றம் செய்பவர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள், பூமிக்கு சுமையாக இருக்கிறார்கள்.
அத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டப்பூர்வமாக கொடுக்கப்படும் தண்டனைகளைவிட, கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் அவர்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும், பெண்ணை தவறாக தொட நினைப்பவர்கள் மனதில் பயம் வரும்.
மக்களிடையே மாற்றம் ஏற்படவேண்டும். குற்றவாளிகள் மத்தியில் அச்சம் ஏற்படவேண்டும் என்று நடிகை பிரகதி உணர்ச்சிபூர்வமான கருத்தினை தைரியமாக பகிர்ந்துள்ளார்.