ஜாக்குலினுடன் பண்ண பெர்ஃபாமென்ஸ்..ரஞ்சித் ஆர்வக்கோளாறு கிடையாது.. நடிகை பிரியா ராமன்..
நடிகர் ரஞ்சித்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ரஞ்சித். 2010க்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ரஞ்சித், செந்தூரப் பூவே சீரியலில் நடித்து சின்னத்திரை பக்கம் சென்றார்.
அதன்பின் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். சமீபத்தில் கெளண்டரம்பாளையம் என்ற படத்தினை எடுத்து சர்ச்சைக்குள்ளாகினார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது கலந்து கொண்டு வரும் ரஞ்சித், இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.
நடிகை பிரியா ராமனை 1999ல் திருமணம் செய்து 15 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் ராகசுதா என்பவரை 2014ல் திருமணம் செய்து அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
முன்னாள் மனைவி பிரியா ராமன்
இந்நிலையில் நடிகையும் ரஞ்சித்தின் முன்னாள் மனைவியுமான பிரியா ராமன் அளித்த பேட்டியொன்றில் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவதை பற்றி பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் டாஸ்க் விளையாடும் போது ரஞ்சித் கொஞ்சம் அமைதியாக தான் இருப்பாரு. சில சமயங்களில் அவர் பாடவும் செய்வாரு. அவர் நல்லாவே பாடுவார். அவர் செய்வாரு. நாங்க ரெகார்ட் செய்தெல்லாம் வைத்திருக்கிறோம்.
பிக் பாஸ் வீட்டில் இப்ப யார் தந்திரமாக விளையாடுறாங்கன்னு கேட்டா, எனக்கு தெரிஞ்சு எல்லாரும் என்ன பால் வரும்னு தெரியாம தான் பேட்டிங் பண்றாங்க. சில நேரங்களில் அந்தப் பந்து ஹெலிகாப்டர் ஷாட் ஆகவும் மாறிடும், டக் அவுட் ஆகவும் மாறிடும். எல்லாருமே அவங்க திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு நேரம் வேணும்.
ரஞ்சித் ஒரு அம்மா பைத்தியம். அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் இடையே அப்படி ஒரு பந்தம் இருக்கிறது. அவங்க ரெண்டு பேரும் நல்லா சண்டை போடுவாங்க. சண்டைக்குப் பேரும் ரஞ்சித்தோட அம்மா சாப்பிடவில்லை என்றால் ரஞ்சித்தும் சாப்பிட மாட்டார்.
இப்போ அவர் அவரின் அம்மா இழப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதேபோல், எல்லாரும் சொல்ற மாதிரி ரஞ்சித் ஆர்வக்கோளாறு கிடையாது. எந்த நேரத்தில் எப்படி விளையாடனும் என்று அவருக்குத் தெரியும்.
அந்த சமயத்தில் அவர் ஜொலிப்பாரு, இப்போகூட சமீபத்துல ஜாக்குலினும் அவரும் பண்ணின தந்தை மகள் பெர்ஃபாமென்ஸ் பார்த்திருப்பீங்க, அவ்வளவு அழகாக ரஞ்சித் பண்ணிருப்பார் என்று ரஞ்சித் பற்றி நடிகை பிரியா ராமன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.