40 வயதான நடிகையை அப்படி சொல்றாங்க, ஆண்கள் மட்டும்!! ஓப்பனாக பேசிய நடிகை..
கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா மணி. இவர் கடந்த 2004 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த காலங்கள் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர் பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், சினிமாவில் இருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்.
சமீபத்தில் ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 40 வயதான ஆண்களை யாரும் அங்கிள் என்று கூப்பிடுவதில்லை.
ஆனால் 40 வயதை கடந்த பெண்களை ஆண்ட்டி என்று கிண்டல் செய்கிறாகள் என்றும் உருவகேலி பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களும் அந்த 40, 50 வயதிற்கு வரத்தான் போகிறார்கள் என்றும் பகிர்ந்துள்ளார்.
மேலும், கேலி செய்வதை ஆரம்பத்தில் பார்த்து கவலைபட்டேன் ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். கேலி கிண்டலுக்கு முக்கியத்துவம் தர கூடாது என்றும் பகிர்ந்துள்ளார் நடிகை பிரியா மணி.