அது ஒரு மோசமான அனுபவம்.. பிரபல இயக்குனர் குறித்து வாய்த்திறந்த ரஜினி பட நடிகை
தமிழ் சினிமாவில் 2012ல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்து கவர்ந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்தி, பெங்காலி, மராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த ராதிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தின் மூலம் பிரபலமானார்.
இதன்பின் வெற்றி செல்வன் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் சர்ச்சை நடிகை என்ற பெயரோடு பிரபலமான ராதிகா, போல்ட்டான கருத்துக்களை கூறி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் ராதிகா ராம் கோபால் வர்மா பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ல் ரத்த சரித்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சில அனுபவங்கள் நன்றாக அமைவதில்லை என்றும் சில நேரங்களின் சில இயக்குனரின் கதை குறித்த பார்வை நம்முடன் ஒற்றுப்போகாது என்றும் கூறியிருந்தார்.
நல்ல கதையாகவும் இருக்காது என்று ராம் கோபால் வர்மாவுடன் வேலை செய்ததை குறித்து கூறியுள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியது பாலிவுட்டிலும் தெலுங்கு சினிமாவில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.