அரசியல்வாதியுடன் 2வது திருமணம்!! குட்டி ராதிகாவின் தற்போதைய நிலை..
குட்டி ராதிகா
கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் இயற்கை படத்தில் நடித்து பிரபலமானவர் குட்டி ராதிகா. அதன்பின் ஒருசில படங்களில் நடித்த குட்டி ராதிகா, ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று ரத்தன் குமாரை பிரிந்தார் ராதிகா. பின் சினிமாவில் நடித்து வந்த ராதிகா, அரசியல் தலைவரான குமாரசாமியுடன் காதல் ஏற்பட்டு ரகசிய திருமணத்தையும் செய்தார்.
பல வருடங்களுக்கு பின் இவர்களுக்கு குழந்தை பிறந்ததையும் அறித்தனர். 2007ல் திருமணம் செய்து 2015ல் குமாரசாமியையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
தற்போதைய நிலை
அதன்பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த குட்டி ராதிகா, பைரவி தேவி என்ற படத்தில் நடித்தும் பாம் சூப்பர் நேச்சர் என்ற திரில்லர் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் குட்டி ராதிகா மகள் ஷமிதா பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அவரின் சமீபத்திய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு குட்டி ராதிகாவா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.