கஸ்டம் ஆபீசர்ரை ஏமாற்றி ரம்பா இந்தியாவுக்கு கொண்டு வந்தது.. சர்ச்சையாகும் பேட்டி
ரம்பா
90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா. இவரது வெற்றிப் பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் வலம் வந்தது.
சினிமாவில் நடித்து கொண்டிருந்த போது ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
இதுவா?
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் ரம்பா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, வெளிநாட்டில் விமானங்கள் மூலம் செடிகள் எடுத்து வர அனுமதி இல்லை. ஆனால் ரம்பா இலங்கையிலிருந்து, ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் மருதாணி செடியின் வேரை சிறியதாக வெட்டி எடுத்து கொண்டு வந்துள்ளார்.
அந்த மருதாணி தற்போது மரமாக வளர்ந்து நிற்கிறது என்று கூறியுள்ளார். ரம்பா பேசியுள்ள இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.