ரசிகரை கொலை செய்த நடிகர்! தவறாக மெசேஜ் செய்தவர்கள் லிஸ்ட்.. நடிகை ரம்யா அதிரடி
Tamil Cinema
Ramya
Actress
By Bhavya
ரம்யா
சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா.
இதையடுத்து சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக மாறினார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ரம்யா கருத்து பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்கு தர்ஷனின் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ரம்யா அதிரடி
இந்நிலையில், ரசிகர்கள் சிலர் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியதாக கூறி அந்த 11 பேரின் பக்கங்களையும் அவரின் மெசேஜ்களையும் ரம்யா பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.