ஆடிஷன்களில் நடந்த விஷயம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!!
Rashmika Mandanna
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சினிமாவில் இப்பொழுது இருக்கும் ரஜினி முதல் விஜய் வரை பல நிராகரிப்புகளை எதிர்கொண்டு தான் இன்று முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருகின்றனர்.
அவ்வாறு பல தடைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா.
ராஷ்மிகா
ராஷ்மிகா சினிமாவில் நுழைந்த அந்த நேரத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அதைப்பற்றி சமீபத்தில் அவர் கூறியுள்ளார், அதில் ராஷ்மிகா 20 முதல் 25 ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவரை நடிகை போல் பார்க்க தெரியவில்லை என கூறி நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.
இவ்வாறு பல நிராகரிப்புகளையும், அவமானங்களையும் கடந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருக்கிறார்.