ரெட் கார்ட் விவகாரம்!! பிக்பாஸ் நடிகை ரவினா தாஹா கொடுத்த விளக்கம் இதான்..
ரெட் கார்ட்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை ரவீனா தாஹா. ஜோடி நம்பர் 1, பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரவீனா, சிந்து பைரவி என்ற சீரியலில் கமிட்டாகி பிரமோ வீடியோவில் நடித்து பின் எபிசோட்டில் நடிக்க மறுத்துள்ளார்.
இதனால் அந்த சீரியலின் தயாரிப்பாளர் ரவீனா மீது புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரவீனா மீது சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தது.
அந்த சீரியலின் கதை சொல்லும் போது தனக்கு முக்கியத்துவம் இருந்ததாகவும், ஆனால் கதையில் மேலும் ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்ததால், சீரியலை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.
ரவினா தாஹா
இணையத்தில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரவீனா, அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், அது என் தனிப்பட்ட விருப்பம். தன் மீதான புகார் தெரிவிக்கப்பட்டது உண்மைத்தான் என்றும் அதற்காக சீரியல்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அந்த பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் ரவீனா விளக்கம் கொடுத்துள்ளார்.