ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த நடிகர்!! போர்க்கொடி தூக்க தயாரான இளம் நடிகை..

Gossip Today Actors Actress
By Jai Jul 25, 2026 12:30 PM GMT
Report

சில்மிஷம் செய்த நடிகர்

முன்னணி நடிகருடன் முதன்முறையாக இணைந்துள்ள இளம் நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் எல்லைமீறிய நடத்தையால் அதிர்ச்சியாகியுள்ளார். ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நடிகையிடம் தொடர்ந்து அதேமாதிரியான செய்கையில் இருந்துள்ளார் நடிகர்.

ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த நடிகர்!! போர்க்கொடி தூக்க தயாரான இளம் நடிகை.. | Actress Ready To Expose Heros Misconduct

இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று படக்குழுவினரிடமும், நெருங்கிய வட்டாரங்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறார். தேவைப்பட்டால் வெளிப்படையாக ஊடகங்களில் கூட சொல்லத் தயாராக இருந்துள்ளார். இந்த விஷயம் படத்தின் தயாரிப்பாளர் காதுக்கு செல்ல, நடிகையை தனியாக கூப்பிட்டு பேசியிருக்கிறார்.

இளம் நடிகை

இப்போது இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் படத்தின் எதிர்காலம் பாதிக்கும். கடன் வாங்கி இப்படத்தை எடுத்து வருகிறேன், படம் வெளியானால்தான் கடன், வட்டியை அடைக்க முடியும். இந்த சர்ச்சை வெடித்தால் படமே போய்விடும். என் குடும்பமும் பெரும் சிக்கலில் சிக்கும்.

ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த நடிகர்!! போர்க்கொடி தூக்க தயாரான இளம் நடிகை.. | Actress Ready To Expose Heros Misconduct

தயவு செய்து படப்பிடிப்பை முடித்துக் கொடுங்கள், அதன்பின் நீங்கள் எதை வேண்டுமானாலும் சட்டப்படி பேசலாம் என்று சமாதானப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர். அவரின் நிலைமையை அறிந்து படத்தை முடித்துக் கொடுக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார் நடிகை. ஆனால் படத்திற்கு பின் நடிகை அமைதியாக இருப்பாரா? இல்லை நடிகரின் இந்த செயல் குறித்து பேசுவாரா என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.