நம்மள யூஸ் பண்ணுவாங்க, அந்த பெரிய ஹீரோ என்கிட்ட அப்படி பண்ணாரு.. நடிகை ரிஹானா வெளிப்படை!!
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிஹானா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசினார். அதில் அவர், கண்டிப்பா நம்மள யூஸ் பண்ணுவாங்க.. ஒரு பிரபல நடிகர் என்னையை கேட்டார். அந்த நபர் பெயர் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் அவர் எல்லாரும் கிரஷ்னு என்று சொல்ற அளவுக்கு பெரிய ஹீரோ.
அவருடன் சேர்ந்து நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீங்கள் நல்ல நடிச்சீங்கனு சொன்னார். உங்களுடைய நம்பர் கொடுங்க, அடுத்த படத்துக்கு சொல்லி வைக்கிறேன்னு என்று கூறி நம்பர் வாங்கினார்.
அதன் பின்னர் மெஸேஜ் பண்ணிட்டே இருந்தார். அவருடன் பேசும் போதே புரிந்துகொண்டேன் ஏதோ தப்பா இருக்கிறது. அதனால் அவரை பிளாக் பண்ணிட்டேன் என்று ரிஹானா கூறியுள்ளார்.