விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகைகள்!! கேலிகளை சந்தித்த கேப்டன்

Vijayakanth Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 28, 2023 11:31 AM GMT
Report

80, 90-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில் எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் கோலிவுட் தனி இடத்தை பிடித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

சினிமாவிற்கு அவர் வந்த புதிதில் பல துன்பங்களை, கேலிகளை சந்தித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி சில முன்னணி ஹீரோயின்கள் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளனர். அந்த நடிகைகள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க..

80, 90 களில் ரஜினி, கமல் என பல முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அம்பிகா. இவர் ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். இதன் பின் 1986 -ம் ஆண்டு வெளிவந்த ”தழுவாத கைகள்” என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர்.

அப்போதைய காலகட்டத்தில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா தான். இவர் பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவரும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தார்,பின்னர் அம்மன் கோவில், உழவன் மகன் போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகை தான் சரிதா. 80, 90 களில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். முதலில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சரிதா, அதன் பின்னர் 1986 ஊமை விழிகள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்த விஜயகாந்த, இன்று காலை அவர் மரணமடைந்த செய்தி எல்லோருக்கும் இடியாக இறங்கியது.

தற்போது அவரின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.