என்னை கூப்பிட்டாங்க....நான் வரலைன்னு சொல்லிட்டேன்!! சீரியல் நடிகை ரேகா..

Gossip Today Iravin Nizhal Tamil Actress Rekha Nair
By Edward Apr 13, 2025 08:30 AM GMT
Report

ரேகா நாயர்

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன் இயக்கத்தில் ரிலீஸான இரவின் நிழல் படத்தில் போல்ட்டான காட்சியில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல விஷயங்களை செய்து வரும் ரேகா நாயர், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

என்னை கூப்பிட்டாங்க....நான் வரலைன்னு சொல்லிட்டேன்!! சீரியல் நடிகை ரேகா.. | Actress Rekha Nair Share About New Channal Reject

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், கோயம்பத்தூரில் ஒரு லோக்கல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சென்றேன். அப்போது கோயம்பத்தூரில் 7 லோக்கல் சேனல் மட்டுமே இருந்தது.

7 சேனல்களிலும் அப்லிகேஷன் கொடுத்தேன். ஒரு சேனல் அழகா இல்லன்னு சொன்னாங்க, ஒரு சேனல் வெள்ளையா இல்லன்னு சொன்னாங்க. என்னோட தமிழ் பேச்சு எல்லோருக்கும் பிடித்திருந்தது ஆனா, அவங்களுக்கு நான் கவர்ச்சியான முகமா நான் இல்லாமல் இருந்தேன்னு தள்ளி தள்ளிவிட்டாங்க.

என்னை கூப்பிட்டாங்க....நான் வரலைன்னு சொல்லிட்டேன்!! சீரியல் நடிகை ரேகா.. | Actress Rekha Nair Share About New Channal Reject

என்னை கூப்பிட்டாங்க

அதன்பின் ஏதோவொரு கவியரங்க மேடையில் என் பேச்சை பார்த்து ஒரு சேனல் ஓனர் அவருடைய சேனலில் செய்தி வாசிப்பாளராக போட்டார்கள். செய்தி வாசிப்பாளர் ஆனப்பின் தொகுப்பாளினியானேன்.

எந்த டிவி என்னை அழகா இல்லைன்னு சொல்லி அனுப்பினாங்களோ, அப்போது லோக்கல் சேனல், இப்போது சேடிலைட் சேனலானப்பின் என்னை கூப்பிட்டாங்க, நான் வரலைன்னு சொல்லிட்டேன் என்று ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.