ரூ. 18 லட்சம் ஏமாற்றிவிட்டார்கள்.. ராதிகா குறித்து நடிகை ஓபன் டாக்..
விஜி சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக திகழ்ந்து பல முன்னனி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை விஜி சந்திரசேகர். நடிகர் சந்திரசேகரின் மனைவியான விஜி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில், நான் நன்றாக நடித்தபோது சரியான சம்பளம் கொடுக்கவில்லை. தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படும். இதனால் சினிமாத்துறையில் இருந்து சென்றுவிடலாமா? என்று பலமுறை யோசித்திருக்கிறேன். நிறைய நல்ல ரோல்களில் நடித்தும் எனக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, ஆனால் அதுபற்றி ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது.
பலரும் என்னை பிற நடிகர்களுடன் ஒப்பிட்டு, அவரைவிட நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் நடிக்க மட்டும்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறீர்கள் என்றும் கூறுவார்கள். ஆனால் தரும் சம்பளம்கூட கிடைக்காது. வெயில், மழை என அனைத்து கலாத்திலும் நடிப்பேன், ஆனால் சம்பளம் வாங்குவதற்கு போராட வேண்டியிருக்கும்.

சில நடிகர்கள் முதலில் சம்பளத்தை எடுத்து வையுங்கள், அதன்பின் நடிக்கிறேன் என்று கறாராக இருப்பார்கள். ஆனால் நான் சம்பளம் விஷயத்தில் அவ்வளவு கறார் காட்ட மாட்டேன். படம் முடிந்தப்பின் குட் பை சொல்லிவிட்டு கிளம்புவார்கள். நான் நடித்து முடிந்தப்பின் இன்றைக்கு சம்பளம் தருகிறேன், நாளைக்கு சம்பளம் தருகிறேன் என்று கூறுவார்கள். எத்தனையோ நாள் போய்விட்டது, ஆனால் எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை, சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. நான் ஒரு சீரியலில் நடித்து முடித்துவிட்டு 8 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்னும் சம்பளம் வரவில்லை.

பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். அந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதால் ராதிகாவால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை, எனவே அவர் அதிலிருந்து விலகினார். அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடக்கச் சொன்னார், நான் முதலில் மறூத்தேன், ஆனால் எனக்காக இதில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். ராதிஆ எனக்கு ஒரு அக்கா மாதிரி. அவர் சொன்னதால் இரவுபகலாக அந்த சீரியலில் நடித்தேன். ஆனால் தொடரை பாதியிலேயே நிறுத்துவிட்டார்கள்.
அந்த சீரியல் முடியப்போவது எனக்கு தெரியாது. என்னுடன் நடித்த நடிகர்கள் யாரும், இன்று கடைசி நாள் ஷூட்டிங், என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் நம்பவில்லை, நான் லீட் ரோலில் நடிக்கிறேன், எனக்குத் தெரியாமல் அப்படி எல்லாம் நிறுத்தமாட்டார்கள் என்று கூறி, என்னுடைய சக நடிகர்களையும் ஷூட்டிங்கிற்கு அழைத்துச்சென்றேன். ஆனால் எனக்கே தெரியாமல் சீரியல் நிறுத்திவிட்டீர்கள். ஷூட்டிங் முடிவதற்கு முன் மாலை 6 மணியளவில் வந்து, இதுதான் கடைசி ஷூட்டிங் என்று கூறினார்கள். எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது.

நான் சமாதானம் கூறி அழைத்து வந்த சக நடிகர்களின் முகத்தை எப்படி பார்ப்பேன், நான் மட்டும் சம்பளம் வாங்கிவிட்டதாக நினைத்து இருப்பார்கள். ஆனால் எனக்கு சம்பளம் தரவில்லை. 18 லட்சம் ரூபாய் பாக்கி தரவேண்டும். இது சின்னதொகை கிடையாது, நான் பலமுறை அந்த நிறுவனத்தை அழைத்து கேட்டேன், ஆனால் இன்னமும் பணம் வரவில்லை. சினிமாத்துறை உண்மையானது கிடையாது, நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்.
ஒருசிலரால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். கர்மா என்று ஒன்று இருப்பதை நான் நம்புகிறேன். எனவே அவர்களின் கர்மா பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடுவேன். என் நெற்றியில் ஏமாளி என்று எழுதியிருக்கிறது, அதனால்தான் என்னை பலரும் ஏமாற்றுகிறார்கள். இதன்பின் நான் கறாராக இருப்பேன் என்று தெரிவித்துள்ள்ளார்.