ஏமாற்றும்போது வருத்தமா இருக்கும்..ஆனா அதை லேட்டாதான் புரிஞ்சிகிட்டேன்!! நடிகை சாரா ஓபன் டாக்..

Bollywood Indian Actress Sara Ali Khan
By Jai May 25, 2026 02:00 PM GMT
Report

சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மே 15 ஆம் தேதி வெளியான நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்துள்ளார் சாரா. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

ஏமாற்றும்போது வருத்தமா இருக்கும்..ஆனா அதை லேட்டாதான் புரிஞ்சிகிட்டேன்!! நடிகை சாரா ஓபன் டாக்.. | Sara Ali Khan Reveals If Social Media Trolls

சமீபத்திய பேட்டியொன்றில், சோசியல் மீடியா விமர்சனங்களால் நான் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னால் அது பொய். நான் நிச்சயமாக பாதிக்கப்படுகிறேன். ஒரு கலைஞராக நான் செய்யும் எல்லாமே என்னுடைய ரசிகர்களுக்காகத்தான்.

அவர்களை நான் ஏமாற்றமடையச் செய்யும்போது எனக்குள் பெரும் வருத்தம் ஏற்படும். சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் என் முழு கவனமும் மக்கள் மீது மட்டுமே இருந்தது.

ஏமாற்றும்போது வருத்தமா இருக்கும்..ஆனா அதை லேட்டாதான் புரிஞ்சிகிட்டேன்!! நடிகை சாரா ஓபன் டாக்.. | Sara Ali Khan Reveals If Social Media Trolls

ஆனால் திரையுலகப் பயணத்தில் சில காலம் பயணித்தப்பின் நமக்காவும் நாம் உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இதை என் சினிமா வாழ்க்கையில் நான் சற்று தாமதமாகத்தான் கற்றுக்கொண்டேன்.

நாம் செய்யும் வேலையை நாம் உண்மையிலேயே ரசித்து, நமது நூறு சதவீத உழைப்பை கொடுத்துவிட்டால் ஒருவித நிம்மதி கிடைத்துவிடும். நான் என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்துவிட்டேன், இனி எல்லாம் கடவுளின் கையில் என்று நினைக்கும்போது தேவையில்லாத மனக்குற்ற உணர்ச்சியோ, மன உளைச்சலோ நமக்கு ஏற்படுவதில்லை என்று கூறியிருக்கிறார் சாரா அலி கான்.