24 குழந்தைகள் பெத்துக்க ஆசை.. நடிகை ரோஜா சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்
ரோஜா
90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தில் நாயகியாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இவர் அடுத்தடுத்து ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி போன்ற பல தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
24 குழந்தைகள்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் குழந்தை குறித்து ரோஜா மற்றும் செல்வமணி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்ன சொல் என் மனதை உடைத்து விட்டது. பின், கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார்" என்று கண்கலங்கி தெரிவித்துள்ளார்.