அரியவகை நோயிலும் நடிகை சமந்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.. ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த போஸ்..

Samantha Indian Actress
By Edward Nov 07, 2022 10:02 PM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார்.

சமுகவலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி வரும் காரணம் என்ன என்ற கேள்வி சமந்தாவிடம் எழுந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.

இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சமந்தாவின் முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி கூட சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்தினை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமந்தாவை பார்க்க நாக சைதன்யா மருத்துமனைக்கு சென்றுள்ளார் என்ற செய்தி வைரலானது. இதைதொடர்ந்து நடிகை சமந்தா சிகிச்சைக்கு பிறகு எடுத்து கொண்ட கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGallery