42 வயதில் முதல் குழந்தை!! அஜித், விஜய் பட நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு இவ்வளவா..
Sanghavi
Tamil Actress
Actress
By Jai
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சங்கவி.
அஜித்தின் அமராவதி படத்தில் அறிமுகமாகி விஜய்யின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இருவரும் காதலிப்பதாகவும் அப்போது கூறப்பட்டது. இதன்பின் பல படங்களில் நடித்து வந்த சங்கவி 36 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.
கடந்த 2016ல் தன்னுடைய 38 வயதில் வெங்கடேசன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார்.

அதன்பின் 2020ல் 42 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
46 வயதான சங்கவி, முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு 10 கோடி சொத்தை சேமித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.