10 வருஷம் காணாமல் போய் வெளிநாட்டில் செட்டிலாகிய நடிகை சரிதா!! வாய்ப்பு கொடுத்து மாற்றிய சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா. தப்புத்தாளங்கள் என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகை சரிதா 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
பல விருதுகளை கைப்பற்றி புகழ்பெற்ற சரிதா, 1975ல் சுப்பையா என்பவரை திருமணம் செய்து ஒரேவொரு ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து 1988ல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றார்.
அவருடன் 23 ஆண்டுகள் வாழ்ந்தப்பின் கருத்து வேறுபாடு அவருடனும் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். சினிமாவில் இருந்து விலகிய பல ஆண்டுகள் கழித்து 2011 அவரை விவாகரத்து செய்து வெளிநாட்டில் மகன்களுடன் செட்டிலாகினார்.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சரிதா. கருப்பு அழகி என்று அந்தகாலக்கட்டத்தில் புகழப்பட்டு தற்போது ரீஎண்ட்ரி கொடுத்திருப்பது அனைவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.