2 நாள் இருன்னு சொன்னார்..அவர் போய்ட்டாரு!! சரோஜா தேவியிடம் எம் ஜி ஆர் பேசிய கடைசி வார்த்தை..

B Saroja Devi M G Ramachandran Gossip Today Death
By Edward Jul 27, 2025 01:30 PM GMT
Report

எம் ஜி ஆர்

1936ல் தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் நாடக நடிகராக இருந்து சதிலீலாவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். அதன்பின் 10 ஆண்டுகள் சினிமாவில் 2வது ஹீரோவாக நடித்தார். 1947ல் ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்த எம் ஜி ஆர், திருடாதே படத்தில் சரோஜா தேவியை நாயகியாக மாற்றினார்.

2 நாள் இருன்னு சொன்னார்..அவர் போய்ட்டாரு!! சரோஜா தேவியிடம் எம் ஜி ஆர் பேசிய கடைசி வார்த்தை.. | Actress Saroja Devi Said About Mgr Last Speech

பின் இயக்கி, தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதி விலகியப்பின் 2வது நாயகியாக சரோஜா தேவி நடித்தார். பின் தன் படங்களில் சரோஜா தேவிக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் எம் ஜி ஆர். ஒருக்கட்டத்தில் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட, சரோஜா தேவி, எம் ஜி ஆர் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

சரோஜா தேவி

1967ல் எம் ஜி ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது சரோஜா தேவிக்கு திருமணமான நிலையில், அவரால் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆனாலும் சரோஜா தேவியின் கணவர் இறந்தபோது உடனடியாக அவரை சென்று பார்த்த எம் ஜி ஆர், அவருக்கு எம் பி பதவி தருவதாக கூறினார். எம் பி பதவி வேண்டாம் என்று கூறிப்பின் நடிக்க தொடங்கினார்.

2 நாள் இருன்னு சொன்னார்..அவர் போய்ட்டாரு!! சரோஜா தேவியிடம் எம் ஜி ஆர் பேசிய கடைசி வார்த்தை.. | Actress Saroja Devi Said About Mgr Last Speech

2 நாள் இருன்னு சொன்னார்

ஒரு பேட்டியொன்றில் சரோஜா தேவி, ஒரு முக்கிய வேலையாக நான் அவருக்கு தொலைபேசியில் பேசியபோது, ராஜீவ் காந்தி வருகிறார், நேருஜியின் சில திறப்புவிழா இருக்கிறது. நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன், நீ இரண்டு நாட்கள் இங்கேயே இரு, அதன்பின் வீட்டிற்கு வா, பேசலாம் என்று கூறினார். அந்நிகழ்ச்சி முடிந்தப்பின் அவர் உறங்க சென்றார். மறுநாள் டிசம்பர் 24 ஆம் தேதி காலையில் நான் தங்கிருயிருந்த அறையில் போன் வந்தது.

ஹோட்டல் ஊழியர், அம்மா உங்கள் ஹீரோ போய்விட்டார்? என்று சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள், தலைவர் போய்விட்டாரா? என்று கேட்டேன். இரு நாட்களுக்கு முன் தான் நீ போகாதே, இங்கேயே இரு என்று சொன்னாது என் நினைவுக்கு வந்தது.

2 நாள் இருன்னு சொன்னார்..அவர் போய்ட்டாரு!! சரோஜா தேவியிடம் எம் ஜி ஆர் பேசிய கடைசி வார்த்தை.. | Actress Saroja Devi Said About Mgr Last Speech

பெங்களூரில் இருந்து சென்னைக்கு நான் எதற்கு வந்தேன் என்று அவருக்கு தெரியும், இங்கிருந்து பெங்களூர் சென்றிருந்தால், திரும்பி அங்கிருந்து வர, ரயிலோ, பேருந்தோ, காரோ, விமானமோ எதுவும் இல்லை. இங்கேயே இருந்ததால், காவல்துறையின் ஜீப்பில் சென்று அவர் காலில் விழுந்து அழுதேன், பின் அனைவரும் என்னைத்தேற்றினர்.

அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. சினிமாவைவிட்டு விலகினாலும் அவர் எங்கள் இதயத்தில் குடி இருக்கிறார் என்று சரோஜா தேவி எமோஷ்னலோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சரோஜா தேவி மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.