தொட்டு தொட்டு நடிக்காதே!! கணவரிடம் டார்ச்சரை அனுபவித்த நடிகை சசிகலாவின் மறுப்பக்கம்....
சசிகலா
சினிமாத்துறையில் நடக்கும் பல சம்பவங்கள் பற்றி பேட்டிகளில் பகிர்ந்து வரும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் சபிதா ஜோசம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நடிகை சசிகலா அனுபவித்த கஷ்டங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், சசிகலாவின் உண்மையான பெயர் சசி கவுர் மல்கோத்ரா. பல படங்களில் நடித்த சசிகலா, கிளாமர் ரோலிலும் நடித்து வந்தார். ராஜேந்திர பிரசாத், மோகன் போன்ற நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார்.
1993ல் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து 2 மகன்களை பெற்றெடுத்தார். திருமணதிற்கு பின் கணவரின் கட்டுப்பாடு சசிகலாவிற்கு அதிகமாகிவிட்டது. ஊர் மரியாதை படத்தில் கணவரை சந்தேகப்படும் மனைவியாக சரத்குமாருடன் சசிகலா நடித்திருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் மனைவியை சந்தேகபடும் கணவர் அமைந்துவிட்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த சசிகலா நாளடைவில் கணவரின் புத்தி வேறுமாதிரியாகி, சந்தேக கண்ணோட்டம் அதிகமாகிவிட்டது.
கணவரிடம் டார்ச்ச
நடிகை சுஜாதா காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கும் கணவரால் டார்ச்சர் தரப்பட்டது, ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. வாணிஸ்ரீயும் இரு குழந்தைகளுடன் தனியாக வந்துவிட்டார். அதேபோல் தான் சசிகலாவும் கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் 4, 5 வருடங்களில் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
ஒளி இல்லம் என்ற கிறிஸ்தவ இல்லத்திற்கு சென்றபோது ஒரு பெண் என்னிடம் கணவரின் சித்ரவதைக்கு ஆளாகி, தன் உடம்பு முழுவதும் சிகரெட் சூட்டுக்கு ஆளானதை சொன்னார். அந்த பெண்ணின் மார்பு, முகம், தொடை உள்ளிட்ட பல பகுதிகளில் சிகரெட் சூடு காணப்பட்டது.
சாதாரண குடும்ப பெண்ணிற்கே சந்தேக புருஷனிடம் இப்படியொரு நிலைமை இருக்கும்போது பல நடிகர்களுடன் ஒன்றாக நடித்த நடிகைகளுக்கு டார்ச்சர் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.