நடிகை சீதாவின் தாயார் திடீரென மரணம்.. சோகத்தில் ஆறுதல் கூறும் ரசிகர்கள்..
நடிகை சீதா
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்த சீதா, இயக்குனர் ஆர் பார்த்திபனை 1990ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட சீதா, பார்த்துபனுடன் சுமார் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, இரு பெண் குழந்தைகளை பெற்று ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்கள். அதன்பின் சீதாவுக்கு பார்த்திபனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பின் நடிகை சீதா நடிகர் சதீஷை கடந்த 2010ல் திருமணம் செய்து 2016ல் விவாகரத்து செய்தார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, திடீரென வெளியேறினார்.
தாயார் திடீரென மரணம்
இந்நிலையில் நடிகை சீதா விருகம்பாக்கத்தில் அவரின் தாயாருடன் வசித்து வந்த நிலையில், நேற்று டிசம்பர் 3 காலை சீதாவின் தாயார் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அவரது சமுகவலைத்தள பக்கம் ஒன்றில் அவரின் அம்மாவின் புகைப்படத்துடன், இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் இறைவனடி சேர்ந்தார் என கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.