ஷகிலா கன்னத்தில் அறைவிட்ட பிரபல கவர்ச்சி நடிகை.. படத்திலிருந்து பாதியில் ஓட்டம்
80 மற்றும் 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
இதன் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது. தற்போது இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் நிகழ்ச்சிகளில் நடுவர் என பிஸியாக இருந்து வருகிறார்.
ஷகிலா பேட்டி
ஷகிலா அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுடன் சேர்ந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது'.
'அந்த படத்தில் சில்க் ஸ்மிதா என் கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சி ஒன்று இருந்தது. அப்போது நான் சில்க் ஸ்மிதாவிடம், "என்னை கொஞ்சம் மெதுவாக அரையுங்கள்"என்று சொன்னேன்.
இந்த காட்சி படமாக்கும் போது சில்க் என்னை வேகமாக அறைந்து விட்டார். இயக்குனர் கட் சொன்னதும் நான் ஷூட்டிங் பாதியில் சென்று விட்டேன்' என்று கூறியுள்ளார்.